வன்முறையாக மாறிய பசுவதைக்கு எதிரான போராட்டம் – 2 பேர் பலி

உத்திரபிரேதேச மாநிலத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது இதில் கல் வீசியதில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் துப்பாக்கிச்சூட்டில் வாலிபரும் பலியாகியுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே உள்ள ஒரு கிராமத்தின் வயல்வெளியில் பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்ந்துள்ளன. அதைக்கணட கிராம மக்களும், இந்து அமைப்பினர்களும் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளனர்.

பசுவை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவலை அறிந்து வந்த போலீசாரை அவர்களிடம் சமாதான பேச்சுக்கு முயன்றுள்ளனர்.அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: