சதம் சோகம் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய கம்பீர்

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் ரஞ்சி போட்டிகளில் தனது 43வது சதத்தை பூர்த்தி செய்தார். தனது இறுதி இன்னிங்ஸில் 112 (185) ரன்களை குவித்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அனுபவ வீரருமான கவுதம் கம்பீர் அனைத்து வகை சர்வதேச மற்றும் உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கனத்த இதயத்துடன் ஓய்வு பெறுவதாக கடந்த செவ்வாய் கிழமை அறிவித்தார்.
மேலும் ஆந்திரா அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் நடக்கு ரஞ்சி கோப்பை போட்டியே தனது கடைசி உள்ளுர் போட்டி எனவும் அறிவித்தார்.

கம்பீரின் கடைசி ரஞ்சி போட்டியான டெல்லி Vs ஆந்திரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி டெல்லி மைதானத்தில் வியாழக்சிழமை தொடங்கியது. இப்போட்டியில் ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து தனது கடைசி போட்டியில் டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார் கம்பீர். இந்திய அணிக்காக கம்பீரின் பங்களிப்பை போற்றும் விதமாக, மைதானத்தில் ஆங்காங்கே நன்றி தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் ரஞ்சி போட்டிகளில் தனது 43வது சதத்தை பூர்த்தி செய்தார். தனது இறுதி இன்னிங்ஸில் 112 (185) ரன்களை குவித்தார்.

கம்பீர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும் போது, மைதானத்தில் பலத்த கரகோசத்துடன் சோகமான முக பாவனையுடன் வெளியேறினார்.

கம்பீர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 4154 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5238 ரன்களும், ரஞ்சி போட்டிகளில் 15,041 ரன்களும், லிஸ்ட் A கிரிக்கெட்டில் 10,077 ரன்களும், டி20 யில் 932 ரன்களையும், ஐ.பி.எல் டி20 போட்டியில் 4218 ரன்களை விளாசியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: