உதடு வெடிப்புகளை குணப்படுத்தும் சூப்பர் மருந்து இதோ..

குளிர்காலம் வந்துவிட்டாலே சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. இந்த வெடிப்புகள் எரிச்சலை போன்ற வலியை ஏற்படுத்துகின்றன.

பெரும்பாலோனோர் இந்த எரிச்சலில் இருந்து நிவாரணம் பெற மருந்து கடைகளில் கிடைக்கும் செயற்கை மருந்துகளையே நாடுகின்றனர். அனால் அந்த செயற்கை மருந்துகள் உங்கள் உதட்டின் இயற்கையான தோற்றத்தையும், நிறத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கெடுக்கின்றன. மேலும் அவைகள் உங்களுடைய உதடு வெடிப்புகளை முழுமையாக குணப்படுத்துவதும் இல்லை.

பிறகு எப்படித்தான் இந்த உதடு வெடிப்புகளை சரி செய்வது?, எந்த மருந்தைத்தான் பயன்படுத்துவது? என்கிற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.

குழப்பம் வேண்டாம்., இதோ சூப்பரான மருந்து ஒன்று இருக்கிறது. வாருங்கள் அது என்னவென்று பார்க்கலாம்.,

குளிர்காலத்தில் உதடு வெடிப்புகள் ஏற்படுவது சாதாரணம் தான், இந்த வெடிப்புகளை தேங்காய் என்னை கொண்டு செய்யப்படும் ஒரு பேஸ்ட்டை பயன்படுத்துவதன் மூலம் குணப்படுத்திவிடலாம்.

அந்த பேஸ்ட்டை எப்படி தாயாரிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.,

தேவையான பொருட்கள்:-

* தேங்காய் எண்ணெய்

* உப்பு

பேஸ்ட் தயாரிக்கும் முறையும், அதனை பயன்படுத்தும் முறையும்:-

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அதனை ஒன்றாக கலக்கும்படி செய்ய வேண்டும். பிறகு அந்த கலவையினை வெடிப்புகள் உள்ள இடத்தில் 30 வினாடிகள் பரவலாக தடவி விட வேண்டும். இதேபோல் ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உதடுகளில் எரிச்சலை உண்டாக்கும் வெடிப்புகள் விரைவில் குணமாகும்

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.