கண்களின் அடிப்பகுதி வீக்கத்தை குணப்படுத்த இப்படி செய்யுங்க..

நம்மில் பலருக்கும் கண்களின் அடிப்பகுதி வீங்கியிருப்பது போல தோற்றம் கொடுக்கின்றன. இதற்கு காரணம் கண்களின் அடிப்பகுதியில் சேரும் தேவையில்லாத கொழுப்புகளே ஆகும். ஆரோக்கியமான அன்றாட பழக்க வழக்கங்களில் இருந்து தவறும் பட்சத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு கண்களின் அடிப்பகுதி வீங்கியிருப்பது தோற்றமளிப்பது, உங்களுடைய அழகை கெடுப்பது மட்டுமல்லாமல் உங்களை வயது மிகுந்தவர்கள் போல காட்டுகிறது.

இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால், இதனை எப்படி சரிசெய்வது?, என்கிற கேள்வி உங்களின் மனதில் இப்போது எழுந்திருக்கும். இனி கவலை வேண்டாம்., இதனை குணப்படுத்த மிகவும் எளிமையான வீடு மருத்துவம் ஒன்று இருக்கிறது. வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.,

பொதுவாக கண்களின் அடிப்பகுதி வீங்கியிருப்பது தோற்றமளிப்பது சாதாரணமான ஒன்று தான். இதனை வாழைப்பழ தோல் கொண்டு எளிமையான முறையில் குணப்படுத்தி விடலாம்.

ஏனென்றால் வாழைப்பழத் தோலில் தான் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் என்சைம்கள் இருக்கின்றன. இது கண்களின் அடிப்பகுதியில் சேர்ந்திருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை அகற்றி வீக்கத்தை குணப்படுத்த உதவுகின்றன.

எடுத்துக்கொண்ட வாழைப்பழ தோலை கண்களின் அடிப்பகுதியில் வீங்கிய இடத்தில் நன்றாக படும்படி 10-15 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விட வேண்டும்.

இப்படி தவறாமல் செய்து வந்தால் ஓரிரு நாட்களில் கண்களை அடிப்பகுதி வீக்கமற்று, இயற்கையாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.