கொடநாடு விவகாரம்; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பொன்.ராதா..

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும், என்று மத்திய பா.ஜ.க இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை ஆவணப்படமாக வெளியிட்டனர்.

இந்த ஆவணப்படத்தில் ஆசிரியர் மேத்யூஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அனால் இந்த குற்றசாட்டை முதல்வர் மறுத்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய பா.ஜ.க இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது.,

கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. இத்தனை நாட்களாக இது குறித்து ஏன் எந்த பிரச்சனையும் வரவில்லை. கொடநாடு விவகாரம் இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன.

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதற்கு பின் யாரு இருக்கிறார்கள். இதன் பின்னணியில் யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். இது குறித்து தீவிர விசாரணையை இப்போதே தொடங்க வேண்டும். தமிழக அரசு இதில் வேகமாக களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.