கொடநாடு விவகாரம்; பொய் குற்றசாட்டு கூறி ஆட்சியை கலங்கப்படுத்துவதா? -தமிழிசை..

பொய் குற்றசாட்டு கூறி ஆட்சியை கலங்கப்படுத்துவதா? என்று கொடநாடு விவகாரம் குறித்து என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை ஆவணப்படமாக வெளியிட்டனர்.

இந்த ஆவணப்படத்தில் ஆசிரியர் மேத்யூஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அனால் இந்த குற்றசாட்டை முதல்வர் மறுத்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம் என்று கூறியிருந்த எதிர்க்கட்சிகளுக்கு தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

பின்பு கொடநாடு விவகாரம் குறித்து பேசிய தமிழிசை, கொடநாடு சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து சட்ட ரீதியான விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும். பொய் குற்றச்சாட்டு சுமத்தி ஒரு ஆட்சியை கலங்கப்படுத்துவதா? நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியாது. மு.க.ஸ்டாலின் உண்மை என்கிறார். அது அவர் தரப்பு. அ.தி.மு.க.வினர் பொய் என்கின்றனர். இருவருமே இது தொடர்பாக தமிழக கவர்னரை சந்தித்துள்ளனர். அது அவர்கள் உரிமை. எது உண்மை என சட்ட ரீதியாக தீர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.