விஸ்வாசம் படம் பார்த்த அஜித் ரசிகர் மரணம்!

விஸ்வாசம் படம் பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர் ஒருவர் திடீரென மரணம் அடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவாகிய பேட்ட படமும், அஜித்தின் நடிப்பில் உருவாகிய விஸ்வாசம் படமும் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்குகளில் வெளியானது.

Image result for viswasam poster image

அதில் விஸ்வாசம் படம் குடும்பங்கள் சென்று ரசிக்கும்படி அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர் ஒருவர் திடீரென மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் பெயர் ராம்குமார், கோவையைச் சேர்ந்த இவர், புதுவையில் உள்ள தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்த்துக்கொண்டிருதார். படத்தின் இடைவேளை வரை விசிலடித்து ஆரவாரத்துடன் படம் பார்த்த ராம்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

போதை அதிமானதால் ராம்குமார் மயங்கியிருப்பார் என்று ராம்குமாரின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ராம்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் நண்பர்கள் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.