கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது . இதில் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை வர்ம கலையின் குறியீட்டுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

22 வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இந்த படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தன. படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்களையும் ஷங்கர் நேரில் சென்று பார்த்தார்.

கமல்ஹாசனும் தனது தோற்றத்தை மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்தார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் அவரை வயதான தோற்றத்துக்கு மாற்றி புகைப்படங்கள் எடுத்தனர். தற்போது அந்த பணிகள் முடிந்து படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளனர்.

சென்னையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து உள்ளனர். கமல்ஹாசன் 2, 3 மாதங்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்து கொள்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

முதல் பாகத்தில் கமல்ஹாசன் வர்ம கலையால் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை வீழ்த்துவதுபோல் காட்சிகள் இருந்தன. இரண்டாம் பாகத்திலும் சண்டை காட்சிகள் வர்ம கலையை மையப்படுத்தி அமைத்துள்ளனர். இது முழுமையான அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.