பதவி விலகுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி? -தங்கதமிழ்செல்வன்

கொடநாடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் பிறந்த நாளான நேற்று ஆண்டிபட்டியில் உள்ள அவரது சிலைக்கு அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அந்த சம்பவம் முதல்வர் பழனிச்சாமி ஏற்பாட்டில்தான் நடந்ததா? என்பது விசாரணையில்தான் தெரிய வரும். முதல்வர் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதால் அவர் தனது பதவியை விட்டு விலகி வேறு ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும். தான் நிரபராதி என நிரூபித்தபின் மீண்டும் முதல்வர் பதவிக்கு வரலாம். இதை அவர் செய்வாரா? என்பது தெரிய வில்லை.

இவ்வாறு தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.