மாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் சீருடைகள்; செங்கோட்டையன் அதிரடி!

அரசுப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் புதிய சீருடைகள் வழங்க இருப்பதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டு போட்டி விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய அவர், வரவிருக்கும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய 4 வகையிலான சிரூடைகள் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் இந்த சீருடைகள் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.