அட்லீ – விஜய் கூட்டணியில் மீண்டும் 3 கதாநாயகிகள்?

சர்கார் படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். மேலும் 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அட்லீ – விஜய் கூட்டணி தெறி , மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைகின்றனர், இது விஜய்க்கு 63-வது படம் ஆகும். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்காக சென்னை பின்னி மில்லில் அரங்கு அமைத்துள்ளனர். அட்லி படங்களில் 2, 3 கதாநாயகிகள் இருப்பது வழக்கம்.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். மேலும் 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

விவேக், பரியேறும் பெருமாள் படத்தில் பிரபலமான கதிர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். வடசென்னையை கதைக்களமாக கொண்டு இந்த படம் தயாராவதாகவும் பேசப்படுகிறது. விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.