ரூ.1000 கொடுத்தது தப்பா? இப்படியா பண்ணுவீங்க! கோபத்தில் எடப்பாடி!

ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் என்மீது ஆயிரம் பொய் வழக்குகளை ஜோடிக்கிறார்கள் என்று முதல்வர் எடப்படி பழனிசாமி கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி உயர கரும்பு, சிறிது முந்திரி- திராட்சை- ஏலக்காய் ஆகிய தொகுப்புடன் ரூ. 1000 பரிசாக தமிழக அரசால் வழங்கப்பட்டது.

அப்போது ரூ .1000 வழங்குவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் 1.30 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு கிடைக்காமலே போனது. இருப்பினும் இந்த வழக்குக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் தன்மீது ஆயிரம் பொய் வழக்குகளை ஜோடிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கொண்டு பேசிய அவர் கூறியதாவது:-

அரசியல் தலைவர்கள் மத்தியில் தனித்தன்மை வாய்ந்தவர் எம்.ஜி.ஆர். அவரால் இயற்றப்பட்ட சத்துணவு திட்டத்தால் தமிழகத்தில் 51 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. தான்.

விரைவில் கொடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு தி.மு.க. நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடுபொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் என்மீது ஆயிரம் பொய் வழக்குகளை ஜோடிக்கிறார்கள்.

நான் எதற்கும் அஞ்சமாட்டேன், இறுதி சொட்டு ரத்தம் உள்ளவரை அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.