கோலியின் சத சாதனையை உடைத்து அம்லா மாபெரும் சாதனை..

தென்ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்  தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது.  அந்த அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. இதனையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 – 0 என பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. 

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹசிம் அம்லா ஒரு நாள் போட்டிகளில் தனது 27வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவிரைவாக (167 போட்டிகளில்) 27 சதங்களை பூர்த்தி செய்தவர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி 169 போட்டிகளில் 27 சதங்களை பூர்த்தி செய்திருந்தார். தற்போது அம்லா இந்த சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 27 சதங்களை பூர்த்தி செய்த 5 வது வீரர் ஹசிம் அம்லா. இதற்கு முன் சச்சின் (49), விராட் கோலி (39), ரிக்கி பாண்டிங் (30), ஜெய் சூர்யா (28) சதங்களை அடித்துள்ளனர்

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.