எகிறும் எதிர்பார்ப்பு நியூஸ்லாந்து அணியிடம் கோலி செய்வாரா மாபெரும் சாதனை

நியூஸ்லாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இத்தொடரில் விராட் கோலி நியூஸ்லாந்துக்கு எதிராக மேலும் இரண்டு சதங்கள் அடிக்கும் பட்சத்தில், அந்த அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த விரேந்திர சேவாக்கின் (6 சதங்கள்) சாதனையை முறியடிப்பார் விராட் கோலி.

மேலும் இத்தொடரில் 4 ரன்களை சேர்க்கும் போது, நியூஸ்லாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிப்பார் விராட் கோலி.

இதுவரை நியூஸ்லாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்தவர்களில் சச்சின் டெண்டுல்கர் 5 சதம் மற்றும் 8 அரை சதத்துடன் 1,750 ரன்களை குவித்து முதல் இடத்திலும், சேவாக் 6 சதம் மற்றும் 3 அரைசதத்துடன் 1,157 ரன்களை குவித்து இரண்டாம் இடத்திலும், விராட் கோலி 5 சதம் மற்றும் 6 அனர சதத்துடன் 1,154 ரன்களை குவித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வருகிற புதன்கிழமை நியூஸ்லாந்தின் நேப்பியரிலுள்ள மெக்லின் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.