“சாமிதான் கும்பிட்டேன், யாகம் நடத்தவில்லை”- ஓபிஎஸ்

“யாகம் ஏதும் நடத்தவில்லை, வழக்கம்போல் சாமி தான் கும்பிட்டேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் யாகம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சட்டியுள்ளதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

தலைமை செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் நான் சாமி கும்பிடுவது வழக்கம். அதுபோல சாமி கும்பிட்டேன், யாகம் ஏதும் நடத்தவில்லை. முதல்வர் ஆவதற்காக யாகம் செய்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிடலாமா? அப்படி பாரத்தால் எம்.எல்.ஏக்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே?

Image result for mk stalin hd images

யாகம் செய்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்கிற மூட நம்பிக்கைக்குள் ஸ்டாலின் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலையொட்டி எந்த பக்கம் சேர்ந்தால் லாபம் கிடைக்கும் என்று செய்வது அறியாமல் பல செயல்களை செய்கிறார்.

காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக ஏற்காத மம்தாவின் கொல்கத்தா கட்சி பொதுக்கூட்டத்திற்கு செல்ல காரணம் என்ன?

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.