அதிரடி அறிவிப்பு 2018 ன் சிறந்த டெஸ்ட் அணி இதுதான்.. ஐசிசி அறிவிப்பு..

ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில் “பெஸ்ட் டெஸ்ட் XI ஆஃப் தி இயர்” சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் வெளியிடப்படும்.

2018க்கான சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது. ஐசிசியின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விராட் கோலியும், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2018:

டாம் வாதம் (நியூஸ்லாந்து), கருண்ரத்னே (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூஸ்லாந்து), விராட் கோலி (கேப்டன்/இந்தியா), ஹென்றி நிக்கோல்ஸ் (நியூஸ்லாந்து), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்/இந்தியா), ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இன்டீஸ்), கசிகோ ரபாடா (தென் ஆப்ரிக்கா), நேதன் லயன் (ஆஸ்ரேலியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்).

எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து அணியில் இருந்து ஒரு வீரர் கூட  தேர்வாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. 

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.