உற்சாகமோ உற்சாகம் உடனடி வீடியோவை வெளியிட்ட விராட் கோலி

2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். மேலும் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியிலும் விராட் கோலி இடம் பெற்றிருந்தது மட்டுமில்லாமல் இரண்டாவது முறையாக இரு அணிகளுக்கும் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் விராட் கோலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்.,

இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியிலும், சிறந்த கிரிக்கெட் வீரராகவும் தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரராக ஐசிசி தரும் கவுரவத்தை மிக உயரியதாக எண்ணுகிறேன். இது போன்ற விருதுகள் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவதற்கு உத்வேகத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டில் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியே இந்த ஆண்டின் சிறந்த நினைவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்ற ஆண்டு இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.