பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தினகரனுக்கு மந்திரி பதவி- ராம்தாஸ் அத்வாலே

பாஜகவுடன் அமமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் பட்சத்தில் டிடிவி தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து மத்தியில் பெரிய கட்சிகளாக வளம் வரும் பாஜகவும், காங்கிரசும் இதர கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தனது துறைசார்ந்த அதிகாரிகளை சந்திக்க இன்று புதுச்சேரிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும்.

தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.