அஜித்தை பற்றிய கேள்வி; எச்.ராஜாவின் கிண்டல் பதில்!

0
10

அஜித்தை பற்றி கேள்வி கேட்டதற்கு கிண்டலாக பதிலளித்துள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் திடீரென பாஜகவில் இணைந்தனர். அப்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌனதாரராஜன் நடிகர் அஜித்தை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார்.



தமிழிசையின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் பரவியது. இதனை அறிந்த நடிகர் அஜித் குமார் அடுத்த நாளே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் தெரிவித்தார். இது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை மாதவரத்தில் திருமண விழா ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நடிகர் அஜித் குமார் குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

நடிகர் அஜித்திற்கு நூலும் விடவில்லை. கயிறும் விடவில்லை.

இவ்வாறு எச்.ராஜா கிண்டலாக பதிலளித்தார்.



Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.