இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம்- முதல்வர் பழனிசாமி

இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம் என்று உலக முதலீட்டாளர் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று துவங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கடந்த 2015-ஆம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. அதில் 98 திட்டங்கள் போடப்பட்டன. மேலும், 3 முதல் 7 வருடங்கள் தொழில் நிறுவனங்கள் வருகைக்காக நிர்ணயிக்கப்பட்டன. அதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்தன.

முதலாவது மாநாட்டில் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவங்கள், உற்பத்தியை முறையாக செய்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம். சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. உள்கட்டமைப்பிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, தமிழகத்தில் 48% பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர். 

இவ்வாறு அவர் பேசினார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.