ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல- உயர்நீதிமன்றம் அதிரடி

0
6

ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் முதல் முக்கிய குற்றவாளியாக ஜெயலலிதாவின் பெயர் சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இவர்கள் நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.

அவர்கள் நால்வரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த சில நாள்களிலேயே நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உறுதி செய்தது. இந்நிலையில் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டே காலமாகிவிட்டதால் மற்ற மூவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதனிடையே ஜெயலலிதாவுக்கு ரூ50 கோடி செலவில் சென்னை மெரினாவில் மணி மண்டபம் கட்டுவதற்கு எடப்படி தலைமையிலான தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டிய ஒருவருக்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எம்எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. எனவே அவருக்கு மணி மண்டபம் கட்ட தடை விதிக்க முடியாது என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.