திடீர் அறிவிப்பு எஞ்சிய போட்டியில் ரோகித் கேப்டன்.. விராத் கோலிக்கு பிசிசிஐ ஓய்வு அறிவிப்பு

நியூஸ்லாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நியூஸ்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் நியூஸ்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-0 இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நியூஸ்லாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி மற்றும் எஞ்சிய டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விராட் கோலி கடந்த ஓராண்டாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். அவர் ஆஸ்ரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். அவர் ஓராண்டாக தொடர்சியாக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் ஓய்வின்றி விளையாடி வருகிறார். மேலும் வருகிற பிப்ரவரி 24 முதல் மீண்டும் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. இதற்காக விராட் கோலிக்கு போதுமான அளவு ஓய்வு தருவது அவசியமாகிறது. எனவே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நியூஸ்லாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி மற்றும் எஞ்சிய டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்படுகிறது.

மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலிக்கு மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கவில்லை.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.