பாஜகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரனின் அதிரடி பேச்சு!

ராமதாஸ் அத்வாலே நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்று புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தமிழகத்தில் ஜெயலலிதா வைத்திருந்த திட்டங்கள் நிறைவேற அ.தி.மு.கவும், அ.ம.மு.கவும் பா.ஜ.கவில் இணையவேண்டும் என்றும், அ.ம.மு.க, பா.ஜ.கவுடன் இணையும் பட்சத்தில் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று பரமக்குடிக்கு வந்திருந்த தினகரனிடம், ராம்தாஸ் அத்வாலே பேசியது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, அவர் கூறியதாவது:-

ராம்தாஸ் அத்வாலே போன்றவர்கள் தங்கள் விருப்பத்தை சொல்கிறார்கள். அவர்கள் நினைப்பதெல்லாம் ஒரு போதும் நடக்காது.

அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அது போல் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரவும் மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.