ரயில்வே துறையில் 2.5 லட்சம் பணியிடங்கள்; அதிரடியாய் அறிவித்த பியுஷ் கோயல்.

ரயில்வே துறையில் இணைய ஆவலாக இருப்பவர்களுக்கு ஒர் அறிய வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

ஆம்.., ரயில்வே துறையில் மொத்தம் 2.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் மிகப்பெரிய துறை ரயில்வே துறை தான் என்பதில் சந்தேகமே இல்லை. ரயில்வே துறையில் தான் அதிமான சொத்துகளும், மக்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

இந்த துறையில் சுமார் லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் ஒண்றரை லட்சம் பேர் புதிதாக பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்நிலையில், ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இனி ரெயில்வே துறை இருக்கும் எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.