ஆஸ்ரேலிய ஓபன் தொடர் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றார் ரஃபேல் நடால்

ஆஸ்ரேலிய ஓபன் தொடரின் அரையிறுதி போட்டியில் கிரீஸ் நாட்டு வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால்.

உலகின் முன்னனி டென்னிஸ் வீரர்கள் விளையாடும் ஆஸ்ரேலிய ஓபன் தொடர் ஜனவரி 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் மற்றும் கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸும் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரஃபேல் நடால் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிமையாக வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்ரேலிய ஓபன் தொடரில் 5 வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார் ரஃபேல் நடால்.

செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் டிஜோவோவிக் மற்றும் பிரான்சு நாட்டின் லூகாஸ் பௌலே ஆகியோருக்கு இடையே நாளை இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவருடன் இறுதி போட்டியில் நடால் மோதுவார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.