ஜெயலலிதாவின் சொத்துக்கள் முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் வருமான வரித்துறையினரால கடந்த 2007-ஆம் ஆண்டிலேயே முடக்கப்பட்டுவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயாஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தற்போது இரு வேறு கருத்துக்கள் நிலவு வருகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித் துறையின் பதிலை உயர்நீதிமன்றம் கேட்டது. அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை 2007-ஆம் ஆண்டே முடக்கி வைத்துள்ளோம், என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் இன்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.

Image result for poyas garden house

வருமானத்துறை மனுவில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.10.13 கோடி சொத்து வரியும், ரூ. 6.62 கோடி வருமான வரியும் நிலுவையில் உள்ளதால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம், ஹைதராபாத்தில் உள்ள வீடு, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள கடை உள்பட 4 சொத்துகள் 2007-ஆம் ஆண்டே முடக்கப்பட்டுள்ளது.

இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்தப் போகிறார்கள்?, என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்த பதிலை தமிழக அரசு இன்னும் 2 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.