அஜித்திற்கு சீமான் வைத்த முக்கிய கோரிக்கை!

நடிகர் அஜித்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் திடீரென பாஜகவில் இணைந்தனர். அப்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌனதாரராஜன் நடிகர் அஜித்தை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார்.

தமிழிசையின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் பரவியது. இதனை அறிந்த நடிகர் அஜித் குமார் அடுத்த நாளே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் தெரிவித்தார். இது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தன் மீது அரசியல் சாயம் பூச நினைத்த அம்மா தமிழிசை அவர்களின் கூற்றுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கையை வெளியிட்டார் நடிகர் அஜித்குமார். இது பாராட்டக்கூடிய விஷயம்.

அதைப்போலவே, உங்களுடைய பதாகைக்கு பாலூற்றும்போது சாரம் சரிந்து விழுந்து, உங்களுடைய ரசிகர் ஒருவர் இறந்து போனார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பரவியது.

இதுபோன்ற விஷயங்களுக்கும் நீங்கள் பேச வேண்டும். உங்களுடைய ரசிகர்கள் உங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கிறாரகள். நீங்கள் சொன்னால் கட்டாயம் கேட்பார்கள்.

இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.