ஆஸ்ரேலிய ஓபன் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோவோவிக் வெற்றி

ஆஸ்ரேலிய ஓபன் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்சு நாட்டின் லூகாஸ் பௌலேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் நோவக் ஜோவோவிக்.

உலகின் முன்னனி டென்னிஸ் வீரர்கள் விளையாடும் ஆஸ்ரேலிய ஓபன் தொடர் ஜனவரி 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ரஃபேல் நடால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோவோவிக் மற்றும் பிரான்சு நாட்டின் லூகாஸ் பௌலே ஆகியோர் மோதினர். இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோவோவிக் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிமையாக வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்ரேலிய ஓபன் தொடரில் 7 வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார் நோவக் ஜோவோவிக். இதுவரை 6 முறை ஆஸ்ரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ஜோவோவிக்.

வருகிறது ஜனவரி 27ந் தேதி ஞாயிற்று கிழமை இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலுடன் நோவக் ஜோவோவிக் மோதுகிறார்

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.