ஆஸ்ரேலிய ஓபன் தொடர் இறுதி போட்டியில் சாம் ஸ்டோசர்,சாங் ஷுய் ஜோடி வெற்றி

ஆஸ்ரேலிய ஓபன் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் சாம் ஸ்டோசர், சாங் ஷுய் ஜோடி வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர்.

உலகின் முன்னனி டென்னிஸ் வீரர்கள் விளையாடும் ஆஸ்ரேலிய ஓபன் தொடர் ஜனவரி 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்ரேலியாவின் சாம் ஸ்டோசர், சைனாவின் சாங் ஷுய் ஜோடி ஹங்ஹேரியின் டைமியா பாபாஸ், பிரான்சின் கிறிஸ்டினா மெலடெனோவிக் ஜோடியுடன் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாம் ஸ்டோசர்,சாங் ஷுய் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிமையாக வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்ரேலிய ஓபன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு கோப்பையை சாம் ஸ்டோசர்,சாங் ஷுய் ஜோடி முதல் முறையாக கைப்பற்றியது.

இந்த வெற்றியின மூலம் சாம் ஸ்டோசர் மகளிர் இரட்டையர் பிரிவின் கைப்பற்றும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் மகளிர் இரட்டையர் பிரிவில் 2005ம் ஆண்டு அமெரிக்க ஓபன், 2006ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார். 2011ம் ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.