உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது- ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்., “#TNGIM-2015 இல் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையே நிறைவேற்றாத அரசு, இப்போது #TNGIM2019 என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது”

எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.