விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு; நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாரான தேமுதிக

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க தரப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்கிற அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் தங்களுக்கான கூட்டணி கட்சியை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மக்கள் பலராலும் மறக்கப்பட்டிருந்த தே.மு.தி.க கட்சி கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை குழுவை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

குழுவில் தே.மு.தி.க. அவைத் தலைவர் வி. இளங்கோவன் கொள்கை பரப்புச்செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் துணைச் செயலாளர்களான ப.பார்த்தசாரதி ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று விஜய காந்த் அறிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் தேமுதிகவும் கூட்டணியுடன் களமிறங்க முடிவு செய்துள்ளதை இந்த அறிவிப்பு தெளிவுப்படுத்தி உள்ளது.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.