ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மக்களிடம் வரியை உயர்த்த வேண்டியிருக்கும்- ஜெயக்குமார்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டுவர, மக்களிடம் வரியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு தனது நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்தும் தொடர்ந்து யாருடைய தூண்டுதலின் பேரிலோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

அரசிற்கு வரக்கூடிய வருமானத்தில் ௭௧ சதவீதத்தை அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதியமாகவும் ஓய்வூதியமாகவும் தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே அதனை புரிந்து கொண்டு தங்களது வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டுமானாலும் ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்காக மக்களிடம் தான் வரியை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களிடம் வரியை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கு தர முடியுமா?

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.