சிறுவனால் தகர்க்கபட்ட சச்சினின் 29 ஆண்டு கால மாபெரும் சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் அரைசதம் கடந்தவர் என்ற பெருமையை கிரிக்கெட் உலகின் விட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கைவசம் இருந்தது. 29 ஆண்டு காலமாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

இந்த சாதனையை நேபாள நாட்டை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரோகித் பெளடேல் தனது 16 வயது 146வது நாளில் யூஎஇ (UAE) அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது 58 பந்தில் 55 ரன் அரைசதம் கடந்து, சச்சினின் சாதனையை முறியடித்தார்.

சச்சின் தனது 16 வயது 213வது நாளில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். இதேபோல் ஒரு நாள் போட்டியில் ஷகித் அஃப்ரிடி தனது 16 வயது 217வது நாளில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் தான் அஃப்ரிடி 37 பந்தில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் மிக குறைந்த வயதில் அரைசதம் லிளசியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நேபாள நாட்டு வீரர் ரோகித் பெளடேல்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.