அதிரடி ஆட்டத்தால் ஆஸ்ரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிக்

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில்  ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிக் மற்றும் இரண்டாம் நிலை வீரர் ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர். உலகின் முன்னனி வீரர்கள் இப்போட்டியில் மோதுவதால் உலகின் டென்னிஸ் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே தனது சிறப்பான ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்தினார் நோவக் ஜோகோவிக். 140 நிமிடங்களுக்கு மேல் நடந்த இப்போட்டியில் 6-3, 6- 2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரஃபேல் நடாலை லீழ்த்தி நோவக் ஜோகோவிக் வெற்றி பெற்றார்.

இப்போட்டியின் வெற்றி மூலம் 7வது முறையாக ஆஸ்ரேலியன் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதுவரை நோவக் ஜோகோவிக் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.