இப்படியா கலாய்ப்பது! நியூஸி வீரர்களை நூதனமாய் கலாய்த்து நியூஸி போலிஸ் போட்ட வைரல் பதிவு

இந்தியா நியூஸ்லாந்து அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் நியூஸ்லாந்து அணி படுதோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் 8 விக்கெட் வித்யாசத்திலும் (டக்வெர்த் லூயிஸ் விதிப்படி), இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது நியூஸ்லாந்து அணி.

இத்தோல்வியால் நியூஸ்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நியூஸ்லாந்து கிழக்கு மாவட்ட போலீஸார் நியூஸ்லாந்து கிரிக்கெட் அணியை லாவகமாக கலாய்த்து தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில்.,

நியூஸ்லாந்து கிழக்கு மாவட்ட போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறது. தற்போது சுரண்டல் கும்பல் ஒன்று (இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்) நம் நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இந்த கும்பல் கடந்த வாரம் நேப்பியர் மற்றும் மவுன்ட் மாங்கானுவில்  அப்பாவி நியூஸ்லாந்தர்களை (நியூஸ்லாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்) கடுமையாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பொதுமக்கள் கையில் கிரிக்கெட் பேட் மற்றும் பந்து போன்றவற்றை வைத்திருந்தால் பத்திரமாக வைத்து கொள்ளவும் என அந்த பதிலில் உள்ளது.

நியூஸ்லாந்து போலிஸின் இந்த நூதன கிண்டல் வைரவாய் பரவி வருகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.