இறந்த பின்னும் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இயங்கி வருகிறது

ஜெயலலிதா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரது வங்கி கணக்கு தற்போது வரை செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலநலக்குறைவு காரணத்தால், சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவர் வாழ்ந்த போயாஸ் தோட்ட வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த வருமான வரித்துறை, ஜெயலலிதாவின் போயாஸ் தோட்ட வீடு மேலும் அவருக்கு சொந்தமான நான்கு சொத்துக்கள் கடந்த 2007-ஆம் ஆண்டே முடக்கப்பட்டுவிட்டது எனவும், நிலுவையில் உள்ள ரூ.16 கோடியை செலுத்தினால் முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்கலாம் என்றும், போயாஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாங்கி கணக்கு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு சொந்தமான வணிகவளாகங்கள், வீட்டு வாடகை மற்றும் கோடநாடு எஸ்டேட் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், ஜெயலலிதா 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, இந்த வருமான வரி நிலைவைத் தொகை குறித்த எந்த தகவல்களையும் தனது வேட்புமனுக்களில் தெரிவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.