4 போட்டிகளில் விளையாட தடை ஐசிசி அதிரடி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தென் ஆப்ரிக்க அணி ஆல்-ரவுண்டர் பெலக்வாயோவை நோக்கி “ஏய் கருப்பு வீரரே. இன்று உங்கள் அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக அவர் இப்போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்” என்று ஸ்லெட்ஜிங் செய்தார்.

சர்ப்ராஸ் அகமதுவின் இனவெறி கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து நான் கூறியது தவறு தான் என சர்ப்ராஸ் அகமது தென் ஆப்ரிக்க அணி ஆல்-ரவுண்டர் பெலக்வாயோவிடம் மன்னிப்பு கேட்டார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சர்ப்ராஸ் அகமது மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஐசிசியின் ஒழுங்கு விதிமுறையை சர்ப்ராஸ் அகமது மீறியதற்காக 4 போட்டிகளில் அவர் விளையாட தடை விதித்துள்ளது ஐசிசி.

இதனால் தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக எஞ்சிய 2 ஒருநாள் மற்றும் முதல் இரண்டு டி20யில் அவர் விளையாடமாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சர்ப்ராஸ் அகமது இல்லாத போட்டிகளை சோயப் மாலிக் வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.