அம்பத்தி ராயுடுவுக்கு பந்து வீச தடை விதித்தது ஐ.சி.சி

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக 2 ஓவர்கள் பந்து வீசினார். 13 ரன்கள் விட்டுக்கொடுத்த அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக நடுவர்களின் அறிக்கை அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகார் தெரிவித்துள்ளது. அடுத்த 14 நாட்களுக்குள் அம்பத்தி ராயுடு தனது பந்து வீச்சு முறையை சோதனைக்குட்படுத்த வேண்டும் என்றும், அதன் முடிவு வெளியாகும் வரை அவர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படும் என ஐ.சி.சி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஐ.சி.சி வழங்கிய 14 நாட்கள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை இந்திய வீரர் அம்பதி ராயுடு தனது பந்துவீச்சைச் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்யவில்லை. எனவே ஐசிசி விதி 4.2ன்படி இனி அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசத் தடைவிதிக்கப்படுகிறது.

அவர் தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்து சட்டப்யூர்வ அனுமதி வழங்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும். மேலும் அம்பத்தி ராயுடு உள்ளுர் போட்டிகளில் பந்துவீச எந்த தடையும் இல்லை என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.