இனி ரோகித்தும் இதில் ஒருவர் மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்தார்

இந்தியா மற்றும் நியூஸ்லாந்து அணிக்களுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 7 விக்கெட் வித்யாசத்தில் நியூஸ்லாந்து அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸ்லாந்து அணிக்கு எதிரான் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இந்த தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா, இப்போட்டியில் 77 பந்துகளில் 62 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாட்டார். இந்த அரைசத்தின் மூலம் ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் அதிவிரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவிரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் விராட் கோலி 212 இன்னிங்ஸ், சவுரவ் கங்குலி 252 இன்னிங்ஸ், சச்சின் 257 இன்னிங்ஸிலும் உள்ளனர். தற்போது இவர்களுடன் ரோகித் சர்மாவும் (260 இன்னிங்ஸ்) இணைந்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.