உடை மாற்றும் பெண்ணை ரகசியமாய் வீடியோ எடுத்த ஹாஸ்பிடல் வார்டு பாய்..

தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளி உடை மாற்றுவதை ஹாஸ்பிடல் வார்டு பாய் படம்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாஸ்சூன் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்து வரும் லகேஷ் லாஹு உட்டேகர்(25), கடந்த சனிக்கிழமை இரவு, எம்.ஆர்.ஐ மையத்திற்கு அருகே உள்ள அறையில் பெண் நோயாளி உடைமாற்றிக் கொண்டிருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளான்.

கடும் வயிற்றுவலி காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பாக உள்நோயாளிப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சனிக்கிழமை மதியம் டாக்டர்கள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து வார்டு பாய் அப்பெண்ணிடம் அருகிலுள்ள அறையில் உடை மாற்றிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற பெண், டேபிளில் செல்போன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே செல்போனை எடுத்து பார்க்கையில், வீடியோ கேமரா ஆன் செய்யப்பட்டு இருந்துள்ளது. அதுவரை நடந்தவை அனைத்தும் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனே அப்பெண் கூச்சலிட்டதால், அதிகாரிகள் ஓடி வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வார்டு பாய் லகேஷ் லாஹு உட்டேகர்(25) கைது செய்யப்பட்டான்.

பின்னர் இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம்., வார்டு பாய் லகேஷ் லாஹு உட்டேகர் மருத்துவமனை ஊழியர் அல்ல. தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மற்ற மருத்துவமனைகளுக்கும் ஏஜென்சி குறித்து எச்சரிக்கை அளிக்கப்படும். எங்களுக்கு நோயாளிகளின் நலன் தான் முதலில் முக்கியம். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த துயரத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.