தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்- உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக கன்னியாகுமரியை  சேர்ந்த ரஷீத் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் பள்ளிகளும் உள்ளன.

டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் போதையில் தகராறு செய்கிறார்கள். இதனால் அந்த பகுதி பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், விளவங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும், நாளை (30-ந்தேதி) மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.