டி20 தொடர்கான நியூஸ்லாந்து அணி அறிவிப்பு

நியூஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளை வென்று ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகள் ஜனவரி 31, பிப்ரவரி 3 தேதிகளில் நடக்கவுள்ளது. இப்போட்டிகளுக்கு பின் இரு அணிகளும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இந்த அணியில் 2 புதுமுக வீரர்கள் டேர்ல் மிட்செல், பிளேர் டிக்னெர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கம் போல் நியூஸ்லாந்து அணி கேன் வில்லியம்சன் வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்து.

டி20 தொடர்கான நியூஸ்லாந்து அணி வீரர்கள் விவரம்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்),   டக்  பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ந்ஹோம், பெர்குசன், (1&2வது போட்டிகளுக்கு மட்டும்) மார்டின் குப்தில், ஸ்காட் குக்கெலின், டேர்ல் மிட்செல், கோலின் முன்ரோ, மிட்செல் சாண்ட்னர், டிம் செபெர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர், பிளேர் டிக்னெர் (3வது போட்டிக்கு மட்டும்).

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.