சற்றுமுன் மாபெரும் அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி! உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை ஐ.சி.சியால் முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்திலையில் ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் வசிக்கும் அணிகளுக்கு, உலக கோப்பை தொடருக்கு முன்பு பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஐ.சி.சி ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி ஆட்டங்கள் விளையாடுமாறு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது..

மே 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய அணி மே 25-ந் தேதி நியூஸ்லாந்து அணியுடன் ஓவல் மைதாைத்திலும், 28-ந்தேதி பங்களாதேஷ் அணியுடன் கார்டிஃப் மைதானத்திலும் விளையாடுகிறது.

போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து அணி 25, 27-ந்தேதிகளில் ஆஸ்ரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.