திடீர் திருப்பம் டார்ச்சருக்கு பயந்து தான் பிக்ஸிங் செய்ததாக ஒப்புக் கொண்டேன் ஸ்ரீசாந்த்

கடந்த 2013ம் ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த மூன்று வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் செய்தாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டு லிசாரணைக்கு உட்படுத்தபட்டனர்.

பின் இவர்கள் மூன்று பேருக்கும் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது பி.சி.சி.ஐ. விசாரணையில் ஸ்ரீசாந்த் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் சிறை தண்டனையில் இருந்து தப்பினார். இருந்தாலும் அவர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீடிக்கும் என பி.சி.சி.ஐ அறிவித்தது.

இதனை தொடர்ந்து தன் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க கோரி கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை தீடிக்கும் என தீர்ப்பளித்தது. இதனால் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீசாந்த் தான் டெல்லி போலிசாரிடம் குற்றம் செய்ததாக சிறையில் இருந்த போது ஒப்புக் கொண்டதற்கு காரணம், போலிசாரின் டார்ச்சருக்கு பயந்து போய் தான் என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பிக்ஸிங் செய்ய புக்கி அணுகிய போது ஏன் நீங்கள் பி.சி.சி ஐ.,யிடம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர், உலகில் எந்த வீரரும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ய புக்கி தொடர்பு கொண்டும், அதை கிரிக்கெட் போர்டுக்கு தெரிவிக்காத குற்றத்துக்காக வாழ் நாள் தடை செயப்படவில்லை எனவும், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டுள்ளனர் என வாதாடினார்.

மேலும் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட அ தி த வாய்ப்புகள் தன்னை தேடி வருவதாகவும், வாழ்நாள் தடை நீடிப்பதால் விளையாட முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே தன் மீதான வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என வாதாடினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.