நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை- தோல்வியால் புலம்பும் ரோஹித்..

நாங்கள் மோசமாக விளையாடியதில் இதுவும் ஒன்று என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடந்து முடிந்த நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, நியூசி வீரர் போல்ட்டின் சிறப்பான பந்துவீச்சால், அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்து 30.5 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து மிகமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதையடுத்து பேட் செய்த நியூசி அணி 14.4 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்து மிகவும் சுலபமாக வெற்றியை நிர்ணயித்தது.

ஆட்டம் முடிந்ததும் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “வெகு நாட்களுக்கு பிறகு நாங்க ஒரு மோசமான ஆட்டத்தை ஆடினோம். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்” என்று கூறினார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.