வைரலாகும் ரிஷப் பந்தின் 7 நொடி வீடியோ

நியூஸ்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது இந்திய அணி. இதனையடுத்து நாளை நியூஸ்லாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்க உள்ளது.

3 டி20 போட்டிகளிலும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் பயிற்சியின் போது ரிஷப் பந்த் ஆடிய 7 நொடி வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ மூலம் நாளைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதில் பந்த் ஆடுவார் என உறுதியாகி உள்ளது.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி :
ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மான் கில், ரிஷப் பந்த், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுகேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், கலில் அகமது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.