இரண்டு இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணியின் இளம் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய கிரிக்கெ அணியில் தங்களுக்கென்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டனர். அவர்களின் திறமையை பறைசாற்றும் வகையில், 2018க்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் அணியில் இவர்களை இடம் செய்தது ஐ.சி.சி.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இளம் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்தை புகழ்ந்து பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது.

கிரிக்கெட்டில் பும்ராவின் வளர்ச்சி எனக்கு ஆச்சரியம் தரும் வகையில் இல்லை. ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் தனி முத்திரை பதிப்பார் எனக்கு முன்பே தெரியும். நான் பும்ராவை 2015ம் ஆண்டு முதல் பார்த்து வருகிறேன். அவர் எப்போதும் புதிதாக கற்று கொள்ள விரும்புபவர். அதே சமயம் கற்றுக் கொண்டதை தெளிவாக எக்ஸுக்யூட் செய்யக் கூடியவர்.

பும்ராவின் பந்து வீசும் போது செய்யும் செய்கையும் ஏமாற்று வேலையும் தான் அவரை சிறந்த பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது. வருகிற உலக கோப்பை போட்டிகளில் பும்ரா எதிரணியினருக்கு அச்சுறுத்தலாகவும், இந்திய அணிக்கு சிறந்த சொத்தாகவும் இருப்பார்.

அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்தின் வளர்ச்சியும் குறிப்பிடதக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை அவர் தக்க வைத்து கொள்ள வேண்டும். மைதானத்தில் அவரின் ஆட்டம் அவரை பயம் அறியாதவராகவே காட்டுகிறது. பந்த் மற்றும் பும்ராவுக்கு கிரிக்கெட்டில் மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என கூறியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்பிரித் பும்ரா 10 டெஸ்ட் போட்டிகளிலே 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போல் ரிஷப் பந்த் 9 டெஸ்ட் போட்டிகளிலே 696 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.