தோல்விக்கு இது ஒன்று தான் காரணம் அழுத்தமாய் கூறிய ரோகித் ஷர்மா

நியூஸ்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா – நியூஸ்லாந்து அணிகள் மோதுகின்றனர்.

இத்தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸ்லாந்து 20 ஓவரில் 219/6 ரன்களை குவித்தது. இதனையடுத்து 220 என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி நியூஸ்லாந்தின் துல்லியமான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இந்திய அணி 19.2 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூஸ்லாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது நியூஸ்லாந்து அணி.

போட்டி முடிந்த பின்னர் பேட்டி அளித்த இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா., இன்றைய போட்டியில் பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பான தொடக்கத்தை தர தவறிவிட்டோம். எப்போதும் 200க்கு மேல் ரன்களை துரத்துவது கடினமான ஒன்று என்று தெரியும். இதற்கு முன் சிலமுறை 200 ரன்களை இந்திய அணி வெற்றிகரமாக துரத்தி வெற்றி பெற்றுள்ளது.

அடுத்தடுத்து லிக்கெட்டுகளை இழந்ததும் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்காததே தோல்விக்கு காரணம். அடுத்த போட்டியில் பேட்டிங் முதலில் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை போட்டி மைதானதிற்கு சென்ற பின் களத்தை பொறுத்து முடிவு செய்யப்படும். நியூஸ்லாந்து அணி பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த மூன்றை செய்யத் தவறியே தோல்விக்கு ஒரே காரணம் என அவர் கூறினார்.

நியூஸ்லாந்து அணியில் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய டிம் செய்பெர்ட்க்கு ஆட்ட றாயகன் விருது அளிக்க பட்டது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.