இரண்டு மாபெரும் மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி

நியூஸ்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. இதனைwடுத்து டி20 தொடரை கைப்பற்ற அடுத்தடுத்து நடக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி.

இதனால் நாளை நடக்க இருக்கும் இரண்டாவது டி20 போட்டி இந்திய அணிக்கு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளைய போட்டியை வெல்ல சில மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி 8 பேட்ஸ்மேன்கள் மற்றும் 3 முழு நேர பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆனால் இரண்டாவது போட்டியில் 4 முழு நேர பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். அதன்படி.,

முதல் போட்டியில் ஒரு அற்புதமான கேட்சை பிடித்த தினேஷ் கார்த்திக், இரண்டு எளிய கேட்சை கோட்டைவிட்டார். மேலும் போட்டியில் குல்தீப் யாதவ் இல்லாதது பந்து வீச்சில் சிறு தொய்வை ஏற்படுத்தியுள்ளது என போட்டி கேப்டன் ரோகித் தெரிவித்திருந்தார். எனவே தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு குல்தீப் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ரிஷப் பந்த் பேட்டிங்கில் மிக மோசமாக விளையாடினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஹர்திக் பாண்டிய ஆசிய மூவரும் மிக மோசமாக பந்து வீசினர். இருந்த போதிலும் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் என்பதாலும், புவனேஷ்வர் குமார் அனுபவ வீரர் என்பதாலும் இருவரும் நீக்கபட வாய்ப்பில்லை. எனவே போட்டியில் இருந்து கலீல் அகமது நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் அல்லது முகமது சிராஜ் இடம் பெறலாம்.

விராட் கோலி இல்லாததால் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். மேலும் ரோகித் ஷ்ரமா, தவான், தோனி, சஹால், குருனால் பாண்டியா ஆகியோர் அணியில் நீடிப்பர்.

எதிர்பார்கப்படும் இந்திய அணி:
ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விஜய்சங்கர், ரிஷப் பந்த், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, யுகேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் அல்லது முகமது சிராஜ்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.