சற்றுமுன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப செய்தி வெளியானது

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கும் ஆஸ்ரேலிய அணியில் விளையாட 1 ஆண்டு தடை விதித்தது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம்.

இந்த தடை வருகிற மார்ச் 29-ந்தேதி முடிவடைகிறது. மார்ச் 30-ந் தேதி முதல் ஐ.பி.எல் போட்டிகளிலும் அதனை தொடர்ந்து 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேச பிரிமீயர் லீக் போட்டியில் பங்கேற்ற ஸ்டீல் சுமித்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வங்காளதேசத்தில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார்.

இதனை தொடர்ந்து ஸ்மித்தின் காயம் குணமடைய குறைந்தது 6 வார காலம் ஆகும் எனவும், இதனால் அவரால் ஐ.பி.எல் மற்றும் உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது என ஆஸ்ரேலிய மீடியாக்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தின் மேனேஜர் வாரன் கிரேக் சற்று முன் அளித்த பேட்டியில்., ஸ்மித்திற்கு வலது முழங்கையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் மூன்றரை வாரங்களில் கை கட்டவிழ்க்கப்பட்டு கிரிக்கெட் விளையாட முழு தகுதி அடைந்துவிடுவார். அதன் பின் உள்ளுர் பயிற்சி ஆட்டங்களிலும், ஐ.பி.எல் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் ஸ்மித் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை கேட்டு ஸ்மித்தின் ரசிகர்களும், ஆஸ்ரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்லினர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.